3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணி

 
Kkr

சன்ரைசர்ஸ் அணியை துவம்சம் செய்து சாம்பியன் பட்டம் என்பது கொல்கத்தா அணி. மூன்றாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றியது கொல்கத்தா அணி 

Ipl

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

டாஸ் என்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலே ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மன் ஆன அபிஷேக் ஷர்மாவை ஸ்டார்க் ஆட்டமிழக்க செய்தார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட்யை வைபவ் அரோரா வீழ்த்தினார். மீண்டும் அசத்திய ஸ்டார்க் திரிபாதியை 9 ரன்னில் வெளியேற்றினார்.
இதன் பிறகு வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரசல் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டார்க் மற்றும் ராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Kkr

114 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணி ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடியது. அதிரடியாக ஆடிய குர்பாஸ் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 26 ரன்களில் 52 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.10.3 ஓவரில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி நடப்பு ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
கொல்கத்தா அணி பெறும் மூன்றாவது சாம்பியன் பட்டம் இதுவாகும். இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த போட்டி ஏமாற்றமாகவே மிஞ்சியது.