பெங்களூரிடம் தோற்று தொடரில் இருந்து வெளியேறிய பஞ்சாப்

 
Ipl

நடப்பு  ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 58வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் வந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர் டு ப்ளிசிஸ் 9 ரன்னிலும் , அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 12 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரஜத் படிதர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிய ரஜத் படிதர் 21 பந்துகளில் அரைசதம் அடித்து 55 ரன்களில் வெளியேறினார்.
 

இதன் பிறகு விராட் கோலி , கேமரூன் கிரீன் உடன் ஜோடி சேர்ந்தார்.சிக்சர்களும், பவுண்டர்களுமாய் அடித்த விராட் கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.கேமரூன் கிரீன் தன் பங்கிற்கு 46 ரன்கள் அடிக்க பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது.

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு பேர்ஸ்டோவ் மற்றும் ரூசவ் கூட்டணி அதிரடியாக ஆடியது.பேர்ஸ்டோவ் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரூசவ் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிறப்பாக ஆடி வந்த ரூசவை 61 ரன்கள் ஆட்டமிழக்க ஆட்டம் பெங்களூருவின் பக்கம் திரும்பியது. சிறப்பாக அடி வந்த சஷாந்த் சிங் 32 ரன்களில் விராட் கோலியால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.
 

அதன் பிறகு வந்த பிறகு வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோல்வியடைந்த பஞ்சாப் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.