பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கும் டெல்லி

 
ஐபிஎல்

நடப்பு  ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 55வது லீக் ஆட்டத்தில் ரிசப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் , சஞ்சு சாம்சன் தலைமையிலான  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

Ipl

டாஸ் என்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.பேட்டிங்கை  தொடங்கிய டெல்லி அணியில் ஜேக் மெக்கர்க் அதிரடியாக ஆடி 19 பந்துகளில் அரைசதம் எடுத்து அட்டமிழந்தார். அபிஷேக் போரல் 36 பந்தில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு அந்த வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டமிழக்க திரிஸ்டின் ஸ்டெப்ஸ் மட்டும் தாக்குப் பிடித்து 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து சட்டம் வந்தார். ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 23 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து நான்கு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஒருபுறம் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நிலைத்து நின்று ஆட மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. சஞ்சு சாம்சன் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க ஆட்டம் டெல்லியின் பக்கம் திரும்பியது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தானி 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லியில் அணியின் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதன் மூலம் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது.