#IPL ப்ளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறியது டெல்லி, லக்னோ அணிகள்

 
Delhi

நடப்பு  ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 64வது லீக் ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியும் , ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின.

டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரரான பிரேசர் மெக்கர்க் முதல் பந்தலே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.நிதானமாக ஆடி வந்த சாய் ஹோப் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதன் பிறகு பொரெல் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய பொரெல் 21 பந்துகளில் அரைசதம் அடித்து 58 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் ட்ரிஷ்டியன் ஸ்டப்ஸ் 27 பந்துகளில் 58 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.20 ஒவ்வொரு முடிவில் டெல்லி அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக 44 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்களை இழந்தது. இதில் பிறகு வந்த பூரன் அதிரடியாக ஆடி சிக்ஸர்களாகவும் பவுண்டரிகளாகவும் விளாசினார்.27 பந்துகளில் 61 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார் பூரன். இறுதிக்கட்டத்தில் அர்சத் கான் அதிரடியாக ஆடி அரைசதம் அடிக்க லக்னோ அணி வெற்றிக்கு அருகில் வந்தது. கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் லக்னோ 3 ரன்களை மட்டுமே எடுத்தது. 20 ஓவர் முடிவில் லக்னோ அணி  9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த போட்டியின் முடிவால் கிட்டத்தட்ட இரு அணியிலும் ப்ளே ஆஃப்  வாய்ப்பில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது.