பொரெல், ட்ரிஷ்டியன் ஸ்டப்ஸ் அதிரடி அரைசதம்; லக்னோ அணிக்கு 209 ரன்கள் இலக்கு

 
IPL

நடப்பு  ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 64வது லீக் ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியும் , ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின.

லக்னோ அணி இந்தப் போட்டியும் அடுத்த போட்டியையும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.டெல்லி அணியோ 180 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது நான்கு ஓவரில் வெற்றி பெற வேண்டும் , இதன் பிறகு மற்ற அணிகளின் வெற்றி தோல்வி என்ற நிலையிலும் இந்த போட்டியை தொடங்கின.

டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரரான பிரேசர் மெக்கர்க் முதல் பந்தலே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.நிதானமாக ஆடி வந்த சாய் ஹோப் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதன் பிறகு பொரெல் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய பொரெல் 21 பந்துகளில் அரைசதம் அடித்து 58 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் ட்ரிஷ்டியன் ஸ்டப்ஸ் 27 பந்துகளில் 58 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.20 ஒவ்வொரு முடிவில் டெல்லி அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது.