ஐபிஎல் 2027 ஏலம்- சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி அணிகளின் வீரர்கள் விடுவிப்பு பட்டியல் வெளியீடு!

 
zs

ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் ஏலத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஆகிய அணிகள் தங்களது அணியிலிருந்து விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.

s

ஆர்சிபி அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்

ஜேக்கப் பெத்தல், ரிச்சர்ட் கிளீசன், மங்கேஷ் யாதவ், சத்விக் தேஸ்வால், விஹான் மல்ஹோத்ரா என மொத்தம் 5 வீரர்களை ஆர்சிபி அணி விடுவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்

டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர், ஏ.எம். கஸன்ஃபர், அதர்வா அன்கோலேகர், கேசவ் மகாராஜ், முகமது இஸார், டேனிஷ் மலேவார், மயங்க் மார்கண்டே, மயங்க் ராவத் என மொத்தம் 9 வீரர்களை மும்பை அணி விடுவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்

மேத்யூ ஷார்ட் (ரூ.1.5 கோடி), மேட் ஹென்றி (ரூ.2 கோடி), ஜாக் ஃபோல்க்ஸ் (ரூ.75 லட்சம்), பிரசாந்த் வீர் (ரூ.14.2 கோடி), அமான் கான் (ரூ.40 லட்சம்), குல்தீப் யாதவ் (ரூ.30 லட்சம்), ஆகாஷ் மத்வால் (ரூ.30 லட்சம்), டியான் ஃபாரெஸ்டர் (ரூ.30 லட்சம்), மேக்னீல் நோரோன்ஹா (ரூ.75 லட்சம்) ஆகிய வீரர்களை சிஎஸ்கே அணி விடுவித்துள்ளது. மேலும், எம்.எஸ். தோனியின் ரூ.4 கோடி தொகையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு ரூ.24.5 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

s

டிசம்பர் 16 ஏலத்திற்கு முன் 10 அணிகளின் கையிருப்புத் தொகை

லக்னோ- ரூ.47.45 கோடி 
கொல்கத்தா- ரூ.41.65 கோடி 
ஹைதராபாத்- ரூ.40.15 கோடி 
டெல்லி- ரூ.39.50 கோடி
மும்பை- ரூ.32.60 கோடி
சென்னை- ரூ.28.05 கோடி
ராஜஸ்தான்- ரூ.27.05 கோடி 
பஞ்சாப்- ரூ.18.60 கோடி
பெங்களூரு- ரூ.14.15 கோடி
குஜராத்- ரூ.8.75 கோடி 

ஏலத்திற்கு முன்பாக அதிக கையிருப்புத் தொகையுடன் லக்னோ அணி முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.28.05 கோடியுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.32.60 கோடியுடனும் ஏலத்தை எதிர்கொள்ள உள்ளன. மறுபுறம், பெங்களூரு அணியிடம் ரூ.14.15 கோடி மட்டுமே கையிருப்பில் உள்ளது. டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ள வீரர்கள் ஏலத்தில் எந்தெந்த அணிகள் முக்கிய வீரர்களைக் குறிவைக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.