IPL 2025- 103 ரன்களில் சுருண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி

 
ச்ட்

நடப்பு ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. 

க்வ்

டாஸில் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆரம்பம் முதலே சென்னை அணியின் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக வீழ்ந்தன. விஜய் சங்கர் மற்றும் சிவம் துபே மட்டும் சற்றே நிலைத்து ஆடினர்; இவர்களில் விஜய் 29 ரன்கள் மற்றும் துபே 31 ரன்கள் எடுத்தனர். மற்ற அனைவரும்  விரைவில் ஆட்டமிழக்க சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.

104 என்ற எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணி தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர் டி காக் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின்னர் சுனில் நரேன் அதிரடியாக விளையாடி 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 10.1 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகள் இழப்பில் கொல்கத்தா 107 ரன்களை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த தொடரில் சென்னை அணி மேலும் ஒருமுறை பெரிய தோல்வியடைந்துள்ளது.
இதன் மூலம் சென்னை அணி பிளே வாய்ப்பு மிகவும் மங்கி உள்ளது.