ஐபிஎல் கிரிக்கெட்- மும்பை அணிக்கு 174 இலக்கு

 
MIvsSRH

நடப்பு  ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 54வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் , பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின.

Image

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ஏற்கனவே 8 போட்டியில் தோல்வியடைந்ததால் இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளது , மறுபுறமோ ஹைதராபாத் அணி 6 வெற்றிகளை பெற்றுள்ளதால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது மட்டுமல்லாமல் முதல் இரண்டு இடங்களை பிடிக்க போட்டி போட்டு வருகிறது.

டாஸ் என்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.பேட்டிங்கை தொடங்கிய சன்ரைசர்ஸ் அணி ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும் சீராக ரன்களை சேர்த்தது.5 ஓவரில் 50 ரன்கள் கடந்த கூட்டணியை பும்ரா உடைத்தார்.11 ரன்களில் அபிசேக் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா. அதன் பிறகு அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டு போல் விக்கெட்களை இழந்தனர். அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இறுதிகட்டத்தில் பாட் கம்மின்ஸ் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.20 ஓவரில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது.