ஐபிஎல் 2021- பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

 

ஐபிஎல் 2021- பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

நடப்பு ஐபிஎல் தொடரின் 32வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் துபாய் மைதானத்தில் மோதின.

ஐபிஎல் 2021- பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் லீவிஸ் ஆகியோர் சிறப்பான துவக்கம் தந்தனர். அருமையாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது.
லீவிஸ் 36 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு துவக்க ஆட்டக்காரரான துரதிஷ்டவசமாக 49 ரன்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியம் லிவிங்ஸ்டன் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடிய லாம்ரார் 17 பந்தில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 185 ரன்கள் சேர்த்தது.பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அர்ஸ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

186 என்ற கடின இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு துவக்கம் அற்புதமாக அமைந்தது 49 ரன்களும்,மயங்க் அகர்வால் 67 ரன்கள் எடுத்து அபார துவக்கம் தந்தனர். ஆனால் இறுதியில் பஞ்சாப் அணி 183 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது