ஐபிஎல்- ருத்துராஜ் கெய்க்வாட்டின் அபார ஆட்டத்தால் சென்னை அணி வெற்றி

 

ஐபிஎல்- ருத்துராஜ் கெய்க்வாட்டின் அபார ஆட்டத்தால் சென்னை அணி வெற்றி

கொரோனா தொற்று பரவல் அபாயத்தால் கடந்த மே மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது.

ஐபிஎல்- ருத்துராஜ் கெய்க்வாட்டின் அபார ஆட்டத்தால் சென்னை அணி வெற்றி


நடப்பு சீசனின் 30-வது போட்டியில்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோத உள்ளது.இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே மோசமாக அமைந்தது.
பாப் டு பிளசிஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த ரெய்னா 4 ரன்களிலும்,தோனி 3 ரன்களிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர்.ராயுடு என் ஏதும் எடுக்காத நிலையில் காயம்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார்.இதன் பின்னர் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.அபாரமாக ஆடிய ருத்துராஜ் கெய்க்வாட் 41 பந்துகளில் அரைசதம் கடந்தார்.ஜடேஜா 26 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பிராவோ அதிரடியாக ஆடினார்.கடைசி 5 ஓவர்களில் 69 ரன்கள் சேர்த்து அசத்தியது கெய்க்வாட் – பிராவோ கூட்டணி.20 ஓவரில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.தனி ஒரு ஆளாக அடித்து நொறுக்கிய 88 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.மும்பை அணி தரப்பில் பும்ரா,போல்ட்,மில்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

157 என்ற இலக்கை துரத்திய மும்பை அணிக்கும் சரியான தொடக்கம் அமையவில்லை.டிகாக் 17 ரன்களிலும்,
அன்மால்ப்ரீட் சிங் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.சவுரப் திவாரி மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆட மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.