சர்வதேச மகளிர் தினம்: மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண ஸ்பெஷல் ஆஃபர்..

 
சர்வதேச மகளிர் தினம்:  மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண ஸ்பெஷல் ஆஃபர்..

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக  நாளை மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளை இலவசமாகக் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

உலகம் முழுவதும் நாளை மார்ச் 8  சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையேயான பாலின வேறுபாட்டை களைந்து, பெண்களின் உரிமைகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே  இந்த நாள் கொண்டாடப்படுகிறது.  சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்கள்ஐ கொண்டாடும் வகையில் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படுவதுண்டு. அந்தவகையில் நடைபெற்று வரும்  மகளிர் ஐபிஎஸ் கிரிக்கெட் தொடரை இலவசமாகக் காண ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

சர்வதேச மகளிர் தினம்:  மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண ஸ்பெஷல் ஆஃபர்..

மகளிர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது  கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் போட்டிகளை பிரபலப்படுத்தவும், பெண்களைக் கொண்டாடும் விதமாகவும் ஐபிஎல் கமிட்டி, அதிரடியான கவர்ச்சிகர சலுகையை அறிவித்திருக்கிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி,  நாளை நடைபெறும் போட்டியை ரசிகர்கள் ( ஆண்/ பெண்) இலவசமாகக் காணலாம என்று தெரிவித்துள்ளது.  அதன்படி நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  இதனை இலவசமாகக் காண முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.