சர்குல் தாகூரின் அபார பந்துவீச்சில் இந்தியாவிடம் பணிந்த தென்னாப்பிரிக்கா

 
indvssa

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகஹனஸ்பார்க்கில் உள்ள வான்டரர் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

indvssa

இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 202 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் தரப்பில் கேப்டன் கே.எல் ராகுல்  50 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து இருந்தது. 

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணியில் கெவின் பீட்டர்சன் 62 ரன்களும் , பவுமா 51 ரன்களும் எடுத்து அசத்தினார். இந்தியன் சர்குல் தாகூர் அசத்தலாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் எடுத்தது. இது இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 26 ரன்கள் அதிகம் சேர்த்து முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் சேர்த்துள்ளது. முதல் இன்னிங்சில் அசத்திய ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். புஜாரா 35 ரன்களுடனும் ரஹானே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தற்போது வரை 58 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளதால் இந்த போட்டி விறுவிறுப்பாக அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.