தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்- கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அசத்தல்

 
virat

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், விராத் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் சேர்த்துள்ளது.

virat

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் உள்ள நியூலாண்டு மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் இந்திய அணியில் இரு மாற்றமாக ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு விராட் கோலியும்,சிராஜ் நீக்கப்பட்டு உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை.கடந்த போட்டிகளில் சிறப்பாக துவக்க கூட்டணி அமைத்த ராகுல் மற்றும் அகர்வால் ஜோடி இம்முறை சொதப்பியது. கே.எல் ராகுல் 12 ரன்களிலும், அகர்வால் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.இதன்பிறகு புஜாரா மற்றும் கோலி ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி வந்தனர்.வழக்கமாக ஆமை வேகத்தில் ஆடும் புஜாரா இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய புஜாரா 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இதன்பிறகு வந்தவர்களில் ரிஷப் பண்ட் மட்டும் 27 ரன்கள் எடுத்து கோலிக்கு ஒத்துழைப்பு தந்தார்.தனி ஒரு ஆளாக அசத்திய விராட்கோலி 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.77.3 ஓவர்களில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் ககிசோ ரபடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக கேப்டன் டீன் எல்கரை 3 ரன்களில் வெளியேற்றினார் ஜஸ்பிரித் பும்ரா.இன்றைய ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் சேர்த்தது.