இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி- இங்கிலாந்து அபார வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட் நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.காயம் காரணமாக நீண்ட காலமாக ஆடாமல் இருந்த முகமது சாமி இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார்.
முதலில் பேட்டிங் தொடங்கியெல்லாம் நினைக்க ஆரம்பத்தில் அதிர்ச்சியாக சால்ட் 5 ரன்கள் வெளியேறினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் டக்கெட் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த இரண்டு போட்டியில் கலக்கிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 24 ரன்கள் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வருண் சக்கரவர்த்தியின் வந்து பிச்சை தாக்குபிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேர்ட்ஸ் வந்து அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். லிவிங்சன் மட்டும் சிறப்பாக அடி 43 ரன்கள் சேர்த்தார்.20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இந்தியா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
172 ரன்கள் என்ற இலக்கை துரத்தி இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 24 ரன்களிலும்,சூர்யகுமார் யாதவ் 14 ரன்களிலும் கடந்த போட்டியில் வெற்றிக்கு வித்திட்ட திலக் வர்மா 18 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து 26 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து தரப்பில் ஓவர்டன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.