10 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி!

 
g

டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி. 2வது அரையிறுதிப்போட்டியில் நிதானமான பேட்டிங், சிறப்பான பந்துவீச்சால் 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.

gg

முதலில் களமிறங்கிய இந்திய அணி 171 ரன்களை சேர்த்தது. 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கி. வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அக்ஸர் படேல், குல்தீப் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, எதிரணியை103 ரன்களுக்கு சுருட்டினர்.

tt

2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியைச் சந்தித்தது. 2022 தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி பதிலடி கொடுத்தது. டி20 உலக கோப்பை வரலாற்றில், தொடரில் விளையாடிய| அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுவது இதுவே முதல்முறை. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோத உள்ளன.