திரும்பவும் மீண்டு வருவோம்...ஆறுதல் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி - முகமது ஷமி!

 
shami

டிரஸ்ஸிங் அறைக்கு வந்து தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி என இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார். 

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.  இதனை தொடர்ந்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக விளையாடியது. டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஸேன் ஜோடி அந்த அணியை வெற்றி பெற செய்தது. 43 ஓவர்களில் அந்த அணி 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 6வது முறையாக அந்த அணி உலக கோப்பையை வென்றது.

இந்த நிலையில், துரதிருஷ்டவசமாக நேற்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி. டிரஸ்ஸிங் அறைக்கு வந்து தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி. திரும்பவும் மீண்டு வருவோம் என்று முகமது ஷமி பதிவிட்டுள்ளார்