டி20 தொடர்- 3வது போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

 
INDvNZ

நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முதல் இரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்று 3வது டி20 போட்டி கொல்கட்டாவில் தொடங்கியது.

Image

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இஷன் கிஷன் மற்றும் ரோகித் சர்மா துவக்க ஆட்டக்காரர்களாக  களம் இறங்கினார்.இஷன் கிஷன் அதிரடியாக ஆடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.ரோகித் சர்மா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதன் பிறகு வந்த வீரர்கள் யாரும் நிலைத்த ஆடாவிட்டாலும் அனைவரும் தலா 20 ரன்கள் வீதம் அடித்து இந்தியாவை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தனர்.20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.

185 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் கப்தில் தவிர அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கப்தில் மட்டும் தாக்குப்பிடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். 17.2 ஓவரில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களை மட்டுமே எடுத்தது இதன்மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி நடைபெற்ற மூன்று போட்டிகளையும் வென்று அசத்தியுள்ளது.