உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடம்! அசத்தும் இந்திய அணி!

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடம்! அசத்தும் இந்திய அணி!

அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 520 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐசிசி டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது இந்திய அணி. இதன் மூலம் ஜூன் 18-ஆம் தேதி லண்டனில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் கோலி படை மோதுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 வெற்றிகள், 4 தோல்விகள், ஒரு போட்டியை டிரா செய்து 72.2 சதவீத வெற்றியை தன்வசமாக்கியுள்ளது, மேலும் 520 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடம்! அசத்தும் இந்திய அணி!

நியூஸிலாந்து அணி 70 சதவீதத்துடன் 420 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், 332 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திலும் 442 புள்ளிகளுடன் இங்கிலாந்து 4-வது இடத்திலும் உள்ளன.

டெஸ்ட் போட்டியின் பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் , உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு சமமானது. இந்த தொடர் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் டெஸ்ட் ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்ததால் டெஸ்ட் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடனான மோதலில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது, இதற்கு பழிவாங்கும் வகையில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.