ஆசிய கோப்பை கிரிக்கெட் - டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு

 
INDvsNEP

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதுவரை 4 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 5வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இலங்கையில் உள்ள கண்டி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 

IND

இந்திய அணி : ரோகித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

நேபாள அணி : குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், ரோகித் பவுடல் (கேப்டன்), பீம் ஷர்கி, சோம்பால் கமி, குல்சன் ஜா, திபேந்திர சிங் ஐரி, குஷால் மல்லா, சந்தீப் லாமிச்சானே, கரண் கேசி, லலித் ராஜ்பன்ஷி  உள்ளிட்டோர் நேபாள அணியில் இடம்பெற்றுள்ளனர்.