ஆசிய கோப்பை கிரிக்கெட் - இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்

 
INDvsSRI

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார். 

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றன. லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் கடைசி இரண்டு இடங்களை பிடித்த ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் வெளியேறின. முதல் நான்கு இடங்களை பிடித்த பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்று பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

IND

இந்த நிலையில், இன்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இந்திய அண்ணியில் ஷர்தூல் தாக்கூருக்கு பதிலாக அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். 


இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இலங்கை: பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா(கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, மதீஷா பதிரனா உள்ளிட்டோர் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.