ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி- இந்தியா அபார வெற்றி

 
INDVsAUS

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் இன்று நடைபெற்றது.


தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா அவருக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்டார்.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் ஹெட் 5 ரன்னிலும்,ஸ்மித் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.அதிரடியாக ஆடிய மிச்சல் மார்ஷ் அரைசதம் கடந்தார்.65 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.35.4 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட் களையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய சிராஜ் மற்றும் முகமது சமி ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் 3 ரன்களிலும்,கோலி 4 ரன்களிலும்,கில் 20 ரன்களிலும்,சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். நடுவரிசையில் களமிறங்கிய கே.எல் ராகுல் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார்.39.5 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கே எல் ராகுல் 75 ரன்களுடனும்,ரவீந்திர ஜடேஜா 45 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து இந்திய அணி வெற்றியை உறுதி செய்தனர்.