இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக நிறுத்தம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு இடங்களை பிடித்த பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்று பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கி விளையாடி வந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இலங்கையின் சுழல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. 47 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த நிலையில் திடீரென மழை குறுகிட்டதால போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.