இந்தியாவை எளிதில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

 
INDvsSA

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்டு மைதானத்தில் நடைபெற்றது.

IndvsSa

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 223 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி பீட்டர்சனின் 72 ரன்களால் 210 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பின்னர் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ரிஷப் பண்ட் சதத்தால் இந்திய அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து இருந்தது.இன்று ஆட்டத்தை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணியில் கீகன் பீட்டர்சன் சிறப்பாக ஆடி 82 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதன் பிறகு ஜோடி சேர்ந்த வாண்டர் டுசன் மற்றும் பவுமா ஜோடி ஆகியோர் மேற்கொண்டு விக்கெட் விழாமல் தென்னாபிரிக்க அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.63.3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.தென்ஆப்பிரிக்க அணியின் இளம் வீரரான கீகன் பீட்டர்சன் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 2 - 1 என கைப்பற்றி அசத்தியுள்ளது இந்த இளம் தென்ஆப்பிரிக்க அணி. இந்தியா தென் ஆப்பிரிக்கா மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்லவில்லை என்ற வரலாறு மீண்டும் தொடர்கிறது.