கடைசி டெஸ்ட்- ரிஷப் பன்ட் அபார சதம்! 198 ரன்களில் இந்தியா ஆல்-அவுட்

 
INDvsSA

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான  கடைசி டெஸ்ட் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை கேப்டவுனில் உள்ள நியூலாண்டு மைதானத்தில் தொடங்கியது.

IndvsSA

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால்  223 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி பீட்டர்சனின் 72 ரன்களால்  210 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணியை விட 13 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் சேர்த்துள்ளது. இன்றைய ஆட்டத்தை தொடர்ந்த உடன் புஜாரா மற்றும் ரகானே அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். தனி ஒருவராக போராடிய ரிஷப் பண்ட் 100 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் இந்திய அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 13 ரன்கள் அதிகமாக சேர்த்ததால் தென்னாப்பிரிக்கா அணிக்கு இலக்காக 212 இலக்காக உள்ளது.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி ஆரம்பத்திலேயே மார்க்கமின் விக்கெட்டை இழந்தது. இதன்பின் எல்கர் மற்றும் பீட்டர்சன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். சிறப்பாக ஆடிய இந்த ஜோடியை ஒரு வழியாக பும்ரா பிரித்தார்.டீன் எல்கர் 30 ரன்களில் ரிசப்பிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் உள்ளதால் வெற்றி வாய்ப்பு தென்னாபிரிக்காவுக்கே அதிகமாக உள்ளது.