டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மழையால் நடைபெறாமல் போனால் யாருக்கு கோப்பை?

டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப்போட்டியில், பலம் வாய்ந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
தென்னாப்பிரிக்கா முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியும் , இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மாபெரும் வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் இரு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இறுதிபோட்டியில் மோதுகின்றன. உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மோதலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாகவும் மேக மூட்டத்துடன் கூடிய காலநிலையில் போட்டி நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
காலையில் பெரும்பாலும் காற்று, மேகமூட்டம் மற்றும் ஈரப்பதம் இருக்கும் பின்னர் பிற்பகலில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை தகவல் வருகிறது. வானிலையால் ஒருவேளை சனிக்கிழமை முழுவதும் போட்டி நடைபெறாமல் போனால் ஞாயிற்றுக்கிழமை ரிசர்வ் டே எனப்படும் மாற்று நாளில் போட்டி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை வானம் மேகக் கூட்டத்துடன் காணப்படும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. ஒருவேளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும் மழை பெய்து போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் சாம்பியன் பட்டம் பகிர்ந்து வழங்கப்படும். அதாதவது கோப்பையை இரு அணிகளும் வென்றதாக அறிவிக்கப்படும்.