இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது!

 
ind vs sa

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. \

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்தியாவின் மெயின் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரனா டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றுள்ளதால், தென் ஆப்ரிக்க அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் பயற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்திய அணி மொத்தம் 4 டி20 தொடரில் விளையாடவுள்ள நிலையில், முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் தொடர் என்பதால் இப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் தோல்வி அடைந்து கோப்பையை பறிகொடுத்த தென் ஆப்ரிக்க அணி அதற்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. ஆனால் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி புதிய உத்வேகத்துடன் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.