தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? இன்று 4வது டி20 போட்டி
இந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கடந்த 08ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டி நேற்று தென் ஆப்ரிக்காவின் கெப்ரா பகுதியில் உள்ள எஸ்.டி. ஜார்ஜ் பார்க் மைதானத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற நிலையில், இப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி 13ம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் என எதிப்பார்க்கப்படுகிறது.