தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்- கோலி உள்ளே! சிராஜ் வெளியே!!

 
India team

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் உள்ள நியூலாண்டு மைதானத்தில் தொடங்கவுள்ளது.

ind team

தென்னாப்பிரிக்க அணி தனது அதிகப்படியான டெஸ்ட் வெற்றிகளை கேப்டவுன் மைதானத்தில் தான் பெற்றுள்ளது என்பதால் இந்தப் போட்டி இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கும்.கடைசி டெஸ்ட் போட்டியில் முதுகு வலி காரணமாக வெளியேறியிருந்த விராட் கோலி, முழு உடற்தகுதி பெற்று
விட்டதாகவும் ,3வது டெஸ்டில் நிச்சயம் விளையாடுவேன் என கூறியுள்ளார்,மேலும் காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள முகமது சிராஜ் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை.முக்கியமான போட்டியில் 100% உடற்தகுதி இல்லாத ஒரு பந்துவீச்சாளரை களமிறக்கி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என அவர் இல்லை எனக்கூறியுள்ளார்.

இதனால் கோலி ஹனுமா விஹாரியின் இடத்திற்கு மாற்று வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ரகானே மற்றும் புஜாரா 2வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் சிறப்பாக ஆடியதால் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிராஜுக்கு மாற்றாக இந்திய அணியில் உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா என 2 சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் சேர்க்கப்பட உள்ளனர்.

கடந்த போட்டியில் இந்திய அணியில் கோலி இல்லாததால் இந்திய அணி சற்று தடுமாறியது என ரசிகர்கள் புலம்பினர். நாளை நடைபெற 3வது டெஸ்ட் போட்டியில் கோலி களமிறங்க உள்ளதால் இந்திய அணி உத்வேகத்துடன் களமிறங்கி 3வது டெஸ்ட் போட்டியை வென்று புதிய வரலாறு படைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.