இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் - வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா

 
indvssa

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகஹனஸ்பர்க்கில் உள்ள வான்டரர் மைதானத்தில் கடநத திங்கள்கிழமை தொடங்கியது.

indvssa

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 202 ரன்களில் ஆல் அவுட் ஆனது.இதனை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில்  கெவின் பீட்டர்சன் , பவுமா  ஆகியோரின் அரைசதத்தால் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இது இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 27 ரன்கள் அதிகம் சேர்த்து தென் ஆப்ரிக்கா அணி முன்னிலை பெற்றது.இந்திய அணியின் தரப்பில் சர்குல் தாகூர் அசத்தலாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் சேர்த்து இருந்தது.புஜாரா 35 ரன்களுடனும்,ரஹானே 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினார்.ரகானே 58 ரன்களிலும்,புஜாரா 53 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் ஹனுமா விஹாரி மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 40 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நிதானமாக ஆடியது.தொடக்க வீரர் மார்க்கம் 31 ரன்களிலும் , அடுத்து வந்த பீட்டர்சன் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது கேப்டன் டீன் எல்கர் 46 ரன்களுடனும் , ராசி வாண்டர் டுசன் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவை உள்ளது இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் இருப்பதால் தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.