மழை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து!

 
rain match

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதுவரை இரண்டு லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 3வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள 3வது லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

indvspak

இதனை தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4.2 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மழை நின்றது போட்டி மீண்டும் தொடங்கியது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இஷான் கிஷான் 82 ரன்களும், ஹர்திக் பாண்டியா 87 எடுத்தனர். இதனையடுத்து  267ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட இருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.