நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்- இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கு

 
ind vs nz

நியூசிலாந்து  அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க உள்ளது.

India vs New Zealand

டி20 இந்திய அணிக் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிய பிறகு, ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டனாக இந்த நியூசிலாந்து டி20 தொடர்தான் முதல் தொடராகும். அதேபோல், ராகுல் திராவிட்டிற்கு முழுநேர பயிற்சியாளராக இதுதான் முதல் தொடர். ஆதலால் ரோகித் ரோகித் கூட்டணி எவ்வாறு செயல்பட உள்ளது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுக வீரராக களமிறங்கினார். நியூசிலாந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேரிட மிச்சல் தான் சந்தித்த முதல் பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து மார்டின் கப்தில் மற்றும் சேப்மன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கப்தில் 70 ரன்களிலும் சேப்மன் 63 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி இறுதிகட்டத்தில் பெரிதாக ரன் குவிக்க இயலவில்லை. 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.