தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? - இன்று 4வது டி20 போட்டி

 
Indvseng

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் இரண்டாவது டி29 போட்டி 25ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்த போட்டியிலும் இந்திய அணி போராடி த்ரில் வெற்றி பெற்றது. இதனிடையே 3வது போட்டி கடந்த 28ம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 
இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. புனேவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.