மகளிர் டி20 உலக கோப்பை - இறுதிப்போட்டிக்கு செல்லுமா இந்தியா?

 
INDW

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் அரைஇறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

8வது மகளிர் டி20 உலக கோப்பை போட்டி தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்காவும், 'பி' பிரிவில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவும் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில் கேப்டவுனில் இன்று முதல் அரைஇறுதி போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகளை வென்ற நிலையில், இங்கிலாந்திடம் தோற்றது. 20 ஓவர் சர்வதேச போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 22-ல் ஆஸ்திரேலியாவும், 7-ல் இந்தியாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. 20 ஓவர் உலகக் கோப்பையில் இரு அணிகளும் 5 முறை சந்தித்ததில் ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டத்திலும், இந்தியா 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.