அபிஷேக் சர்மா அபாரம்...இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்திய இந்தியா!

 
ind

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் நேற்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இறுதியாக அந்த அணி 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 68 ரன்கள் எடுத்தார். 

இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 12.5 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா 79 ரன்களும், சஞ்சு சாம்சன் 26 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.