அபார வெற்றி! இங்கிலாந்து அணியை அலறவிட்ட அபிஷேக் சர்மா!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் இரண்டாவது டி29 போட்டி 25ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்த போட்டியிலும் இந்திய அணி போராடி த்ரில் வெற்றி பெற்றது. இதனிடையே 3வது போட்டி கடந்த 28ம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 4வது போட்டி கடந்த 31ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், 5வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 247 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மாக் 135 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.