இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - இந்திய அணி அபார வெற்றி!

 
ind

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 02ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலாவதாக பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஷ்வால் இரட்டை சதம் விளாசினார். இருப்பினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  இறுதியாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாக் க்ராவ்லி 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ind


 
இதனை தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்க்சை தொடங்கிய இந்திய அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  அதிகபட்சமாக சுப்மான் கில் 104 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.