உலக கோப்பை - இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்-நெதர்லாந்து மோதல்

 
NED

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 33 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை நடந்து முடிந்த போட்டி முடிவுகளின் படி இந்திய அணி 7 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதோடு அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணி 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 4 வெற்றி 3 தோல்வியுடன் 4வது இடத்தில் உள்ளது.   

AFG

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 34வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டியானது லக்னோ மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி, 3ல் வெற்றி 3ல் தோல்வி என் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும். ஆகையால் ஆப்கானிஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.