உலக கோப்பை கிரிக்கெட் - இன்றைய போட்டியில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதல்

 
nz

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 40 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இதுவரை நடந்து முடிந்த போட்டி முடிவுகளின் படி இந்திய அணி 8 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதோடு அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 4வதாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் அணிக்கான போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. 

SRI vs IRE

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. ரன்ரேட்டில் நல்ல நிலைமையில் உள்ள நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தினால் எளிதில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொள்ளும். தொடர் தோல்வியால் திணறி வரும் இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.