உலக கோப்பை - அரையிறுதி போட்டிக்கான அட்டவனையை வெளியிட்டது ஐசிசி

 
semi final

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிக்கான அட்டவனையை ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 43 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நடந்து முடிந்த போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியா முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதேபோல் இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா, மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய ஆகிய அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன. நான்காவது இடத்திற்கு கடும் போட்டி நிலவிய நிலையில், பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றது. 

இந்த நிலையில், அரையிறுதி போட்டிக்கான அட்டவனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற 15ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதேபோல் 16ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈர்டன் கார்டனில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.