இனி பேட்ஸ்மேன் இல்லை ‘பேட்டர்ஸ்’

 

இனி பேட்ஸ்மேன் இல்லை ‘பேட்டர்ஸ்’

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக பேட்ஸ்மேன் என்கிற கிரிக்கெட் சொல்லுக்கு மாற்றாக பேட்டர் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இனி பேட்ஸ்மேன் இல்லை ‘பேட்டர்ஸ்’

கிரிக்கெட் விதிமுறைகளை வகுப்பதில் எம்.சி.சி என்றழைக்கப்படும் மெரிலேபோன் கிரிக்கெட் கிளப் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் கிரிக்கெட் விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது ஐசிசி என்கிற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் என்கிற சொல் ஆடவரை மட்டும் குறிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்தார்கள். சில ஆங்கில ஊடகங்கள் பேட்ஸ்மேன் என்கிற சொல்லுக்குப் பதிலாகப் பொதுவாக பேட்டர் என்கிற சொல்லைப் பயன்படுத்தி வருகின்றன. இதனால் பேட்ஸ்மேன், பேட்ஸ்மென் என்கிற சொற்களுக்குப் பதிலாக பேட்டர், பேட்டர்ஸ் என்கிற பொதுவான சொற்களை ஆடவர், மகளிர் கிரிக்கெட்டில் பயன்படுத்தும்படி தனது விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது எம்.சி.சி.

பாலின சமத்துவத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் சொற்களைப் பயன்படுத்தும்போது கிரிக்கெட் அனைவருக்குமானதாக மாறுகிறது என இந்த மாற்றம் பற்றி எம்.சி.சி. கருத்து தெரிவித்துள்ளது.