தோனியை வெறுப்பவர்கள் பிசாசு! நான் எப்போதும் தோனி ரசிகன் - ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

 
Hardick and ms dhoni

தோனியை ஒருவர் வெறுக்க வேண்டுமென்றால் அவர் பிசாசாகத்தான் இருக்க வேண்டும் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், மற்ற அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. லீக் சுற்று முடிவில் நடப்பு குஜராத் டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 புள்ளிகள் பெற்று, 2-வது இடத்தை பிடித்தது. இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் முதல் தகுதி சுற்று இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி இரண்டாவது தகுதி சுற்றுக்கு செல்லும். 
 
இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறிய கருத்து வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: பலருக்கும் தோனி சீரியஸான நபரென்றே தோன்றும், ஆனால் நான் அவருடன் சோக்ஸ் சொல்லி கொண்டிருப்பேன். நான் எப்போது தோனியின் ரசிகன். தோனியை ஒருவர் வெறுக்க வேண்டுமென்றால் அவர் பிசாசாகத்தான் இருக்க வேண்டும். சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதவுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.