மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத்!

 
MIvsGT

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மும்பையை அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெறுங்கியுள்ளது. இதில் சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. முதல் தகுதி சுற்று போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், அந்த போட்டியில் தோல்வி அடைந்த குஜராத் அணி இரண்டாது தகுதி சுற்றுக்கு சென்றது. இதேப்போல் வெளியேறுதல் சுற்றில் லக்னோ அணியும், மும்பை அணியும் மோதின. இதில் மும்பை அணி லக்னோ அணியை 81 ரன்கள் வீழ்த்தி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில்,  நேற்று நடைபெற்ற இரண்டாது தகுதி சுற்று போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சுப்மன் கில் 129 ரன்கள் குவித்தார். இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இழக்குடன் களமிறங்கிய மும்பை 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பையை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.