இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வு

 
கோலியை வெளியேற்ற வேண்டும் – கம்பீர் காட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் கடந்த டி20 உலகக்கோப்பை போட்டியுடன் முடிந்தது.  இந்த உலகக் கோப்பையை தொடர்ந்து மேற்கொண்டு பயிற்சியாளராக தொடர விருப்பமில்லை எனவும் தனிப்பட்ட வாழ்க்கைக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ராகுல் டிராவிட் கூறியிருந்தார். இதனால் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பத்தை அவர் விண்ணப்பிக்கவில்லை.  இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக  தகவல்கள் வெளியாகி வந்தன. 

எக்ஸ் தளம்

இந்த நிலையில் பிசிசிஐன் தலைமைச் செயலாளராக ஜெய்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரு கௌதம் கம்பீர் அவர்களை இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தற்கால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் கௌதம் இந்த மாறிவரும் வடிவத்தை அருகில் இருந்து பார்த்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளை சகித்துக்கொண்டு, பல்வேறு பாத்திரங்களில் சிறந்து விளங்கியதால், இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கௌதம் சிறந்த நபராக இருப்பார் என்று நான் நம்புகிறேன். இந்திய அணியை பற்றிய அவரது தெளிவான பார்வை, அவரது பரந்த அனுபவத்துடன் இணைந்து, இந்த உற்சாகமான மற்றும் மிகவும் விரும்பப்படும் பயிற்சியாளர் பாத்திரத்தை ஏற்று அவரை முழுமையாக நிலை நிறுத்துவார் என நம்புகிறேன். பிசிசிஐ அவரின் இந்தப் புதிய பயணத்தைத் தொடங்குவதற்கு அவரை முழுமையாக ஆதரிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கம்பீர்

கௌதம் கம்பீர் கேப்டனாகவும் ஆலோசராவும் ஐபிஎல் தொடர்களில் கோப்பையை வென்றுள்ளதால் வருங்காலங்களில் இந்திய அணி மேலும் பல கோப்பைகளை வெல்லும் என கருதப்படுகிறது.