கேலோ இந்தியா விளையாட்டு போட்டி - தமிழகத்திற்கு முதல் தங்கம்!

 
khelo

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தமிழகத்திற்கு முதல் தங்க பதக்கம் கிடைத்துள்ளது.    

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023ஐ பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளன. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும், 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம் பெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இடம்பெற உள்ளது.

இந்த நிலையில்,  கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தமிழகத்திற்கு முதல் தங்க பதக்கம் கிடைத்துள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் யோகாசனத்தில் தமிழக வீரர்கள் தங்கப் பதக்கம் வென்றனர். யோகாசனம் RHYTHMIC பிரிவில் சர்வேஷ், தேவேஷ் ஆகியோர் 127.89 புள்ளிகள்
பெற்று தங்கம் வென்றனர்.