உலக கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து!

 
ENG

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 43 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நடந்து முடிந்த போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியா முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதேபோல் இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா, மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய ஆகிய அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன. இதேபோல் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. 

ENG

இந்த நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தது. நிதானமாக ஆடிய அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 84 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணி 43.3 ஓவர்களுக்கு 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.