பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா - இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட்

 
bumrah

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலாவதாக பேட்டிங் தேர்வு செய்தது.

jaishwal

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஜெய்ஷ்வாலும் களமிறங்கினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஷ்வால் இரட்டை சதம் விளாசினார். இருப்பினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களிலும், சுப்மன் கில் 34 ரன்களிலும், ஐயர் 27 ரன்களீலும், ரஜத் படித்தார் 32 ரன்களிலும், அக்சர் 27 ரன்களிலும் வெளியேறினர். இறுதியாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாக் க்ராவ்லி 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.