பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா - இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்

 
indvseng

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனிடையே முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று முதல் வருகிற 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இப்போட்டியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.  

ind

இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் இந்த போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே தடுமாறியது. இறுதியாக அந்த அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் அக்‌ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.