ருதுராஜ் கெய்க்வாட் விலகல்- கேப்டன் கூல் ரிட்டன்ஸ்!

நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விலகினார். சிஎஸ்கேவை தோனி வழிநடத்துவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
2023ல் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி. அதன் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் அடைந்த நிலையில் அவர் இன்னும் குணமடையவில்லை. இதன் காரணமாக அவர் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெறவில்லை. கெய்க்வாட் இல்லாத நிலையில் சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை ஏற்க வேறு எந்த வீரரும் தற்போது சிஎஸ்கே அணியில் இல்லை. இதனால் தோனிக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக, ருதுராஜ் கெய்க்வாட் முழு ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் வெளியேறியுள்ளார், மீதமுள்ள ஆட்டத்திற்கு எம்எஸ் தோனி கேப்டனாக பொறுப்பேற்பார் என சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.