சிஎஸ்கே அணியில் ‘குட்டி ஏபி’ பிரவீஸ்- உற்சாகத்தில் ரசிகர்கள்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்று, 5 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த அணியில் கேப்டன் தோனியைத் தவிர மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடும் திறனில் கவனம் செலுத்த முடியாமல், ஃபார்ம் அவுட் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். இந்தச் சூழலில், தென்னாப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் பிரவீஸ், சமூக வலைத்தளத்தில் மஞ்சள் நிறத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். சில மணிநேரத்திற்குப் பிறகு, ஐபிஎல் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியான அறிவிப்பில், சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்நீட் சிங் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார் என்றும், அவரது பதிலாக பிரவீஸ் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்றும் உறுதி செய்யப்பட்டது.
ரசிகர்கள் “குட்டி ஏபி டிவில்லியர்ஸ்” என அன்போடு அழைக்கும் பிரவீஸ், அண்மையில் நடைபெற்ற எஸ்ஏ டி20 தொடரில் 12 போட்டிகளில் 291 ரன்கள் குவித்து, 184 ஸ்ட்ரைக் ரேட்டும், 48 ரன்கள் சராசரியும் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரவீஸை தேர்வு செய்துள்ள சிஎஸ்கே அணிக்குப் பெரும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது


