டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங்!

 
csk

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லப்போகும் அணிகள் எது என்பது இதுவரை தெரியவில்லை. குஜராத் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ள நிலையில், அடுத்த மூன்று இடத்திற்கு கடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று பிற்பகலில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

சென்னை அணி : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா உள்ளிட்டோர் சென்னை அணியில் இடம்பெற்றுள்ளனர். 

டெல்லி அணி : டேவிட் வார்னர்(கேட்ச்), பிலிப் சால்ட்(டபிள்யூ), ரிலீ ரோசோவ், யாஷ் துல், அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே உள்ளிட்டோர் டெல்லி அணியில் இடம்பெற்றுள்ளனர்.